உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொழிலாளியை தாக்கிய மருமகனுக்கு காப்பு

தொழிலாளியை தாக்கிய மருமகனுக்கு காப்பு

கிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டை அடுத்து உள்ள மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் மகாலிங்கம், 43, கூலித்தொழிலாளி. இவரது மகள் நந்தினிக்கும் தியாகராஜன், 31 என்பவருக்கும், 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. தியாகராஜனுக்கு மது பழக்கம் இருந்தது. இதனால் தம்பதியரிடையே பிரச்னை இருந்தது. இந்நிலையில் நந்தினி, தன் பெற்றோர் வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன் சென்று விட்டார். கடந்த, 26ல், தியாகராஜன், மகாலிங்கம் வீட்டிற்கு சென்று, மனைவியை தன்னுடன் அனுப்பக்கூறி தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் தியாகராஜன், மாமனார் மகாலிங்கத்தை செங்கல்லால் தாக்கினார். மகாலிங்கம் புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார் தியாகராஜனை கைது செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ