உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்தல் கால வாக்குறுதியைநிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்ம்

தேர்தல் கால வாக்குறுதியைநிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்ம்

தேர்தல் கால வாக்குறுதியைநிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்ம்கிருஷ்ணகிரி: தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் குபேரன் பேசினார். சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், பொருளாளர் நந்தகுமார், மகளிர் துணை குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா, மாவட்ட துணை தலைவர் பெரியசாமி, வட்ட கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை