மேலும் செய்திகள்
உத்திரமேரூர் ஏரியில் 65 சதவீத நீர் இருப்பு
05-Nov-2024
கிருஷ்ணகிரி, டிச. 4-'பெஞ்சல்' புயலால், கிருஷ்ணகிரியில் கடந்த, 2ல், 108.2 மி.மீ., 3ல், 23.2 மி.மீ., மழை பெய்ததால், நகரில் இருந்து வெளியேறிய மழைநீர், மையத்தில் உள்ள பாப்பாரப்பட்டி ஏரிக்கு சென்றது. அங்கிருந்து கால்வாய் மூலம் கிட்டம்பட்டி, மோட்டூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து அவதானப்பட்டி ஏரிக்கு சென்றது. அதேபோல், தேவசமுத்திரம் ஏரியில் இருந்து வெளியேறிய நீர் முல்லை நகர், அக்ரஹாரம் வழியாக அவதானப்பட்டி ஏரிக்கு சென்றது. அவதானப்பட்டி ஏரி ஏற்கனவே நிரம்பி இருந்ததால், ஏரிக்கு வந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது. தண்ணீர் வெளியேறும் இடத்தில் நேற்று, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியில் இருந்து வரும் மீன்களை பிடிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர்.அவதானப்பட்டி ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீர், கால்வாய் மூலம் திம்மாபுரம் ஏரிக்கு சென்றது. இதனால் கே.ஆர்.பி., அணை கூட்ரோட்டில், நேற்று முன்தினம் சாலையில், 2 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றது. நகரை சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து உபரிநீர் செல்லும் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், முல்லை நகர், அக்ரஹாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது. எனவே, புதிய பஸ் ஸ்டாண்டிலுள்ள சின்னஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, தேவசமுத்திரம் ஏரி, புதுார் ஏரி, அவதானப்பட்டி ஏரி, திம்மாபுரம் ஏரிகளின் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
05-Nov-2024