உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

தர்மபுரி: தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தர்மபுரி அலுவலகம் அருகே நேற்று, 24 மணி நேர தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுருளி-நாதன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் அண்ணா குபேரன் துவக்கி வைத்து பேசினார். இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். சத்-துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியா-ளர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள், ஊர்புற நுாலகர்கள், வனத்-துறை ஊழியர்கள், கணினி இயக்குனர்கள், மகளிர் திட்ட ஊழி-யர்கள், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் என்.எச்.எம்., தொகுப்பூதிய ஊழியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியா-ளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப்பணி-யிடங்களை பூர்த்தி செய்து, காலமுறை ஊதிய நடைமுறையில் பணி வழங்க வேண்டும். காலமுறை ஊதிய நடைமுறையில் நிரந்-தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை