முள்ளங்கி விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, ஜிம்மாண்டியூர், வலசகவுண்டனுார், மேட்டுபுலியூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 500 ஏக்கர் பரப்பளவில், முள்ளங்கியை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். தற்போது கீழ்குப்பம் பகுதியில், முள்ளங்கி அறுவடை நடந்து வருகிறது. நடவுப்பணி முதல், அறுவடை செய்யும் வரை கிலோவிற்கு, 7 ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்த நிலையில், அதை வியாபாரிகள் கிலோ, 7 ரூபாய்க்கே கொள்முதல் செய்வதால், லாபம் கிடைக்காமல், விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.