உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ராஜிவ் நினைவு நாள் அனுசரிப்பு

ராஜிவ் நினைவு நாள் அனுசரிப்பு

ஓசூர், ஓசூர், காந்தி சிலை அருகே, காங்., கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.அவரது உருவப்படத்திற்கு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நீலகண்டன் தலைமையில், கட்சியின் மாலை அணிவித்தும், மலர் துாவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.ஓசூர் தொகுதி பொறுப்பாளர் மைஜா அக்பர், மாநில செயற்குழு உறுப்பினர் சூர்யகணேஷ், மாநகர முன்னாள் துணைத்தலைவர் கனி, மாநில விவசாய அணி கன்வீனர் சீனிவாசன், விவசாய அணி மாநகர தலைவர் வித்தியாசாகர், மகளிரணி சரோஜம்மா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !