உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனுமதியின்றி வைத்த த.வெ.க., பெயர் பலகை அகற்றம்

அனுமதியின்றி வைத்த த.வெ.க., பெயர் பலகை அகற்றம்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரத்தில், பஸ் ஸ்டாண்ட் அரு‍‍கே, த.வெ.க., கட்சி பெயர் பலகை திறப்பு விழா, நேற்று நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அங்கு, பொம்மிடி எஸ்.ஐ., விக்னேஷ் தலைமையிலான போலீசார் வந்து, அனுமதியின்றி கட்சி பெயர் பலகை வைத்துள்ளதை அகற்ற தெரிவித்தனர். திறப்பு விழா முடித்து விட்டு, எடுத்து கொள்வதாக கட்சியினர் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், த.வெ.க.,வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் போலீசாரின் உத்தரவால், கட்சி பெயர் பலகையை, த.வெ.க., தொண்டர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை