உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க தீர்மானம்

பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க தீர்மானம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பது மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், பையூர் ரவி, சைலேஷ் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., பேசினார்.கூட்டத்தில், வரும், 11ல் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், பல்வேறு கட்சியில் இருந்து, தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் தலைமையில், 10,000 பேர், அ.தி.மு.க.,வில் இணைய உள்ளனர். அதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு, மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். வரும், 24ல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி