உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துணை முதல்வர் உதயநிதி வருகை முன்னேற்பாடு பணி குறித்து ஆய்வு

துணை முதல்வர் உதயநிதி வருகை முன்னேற்பாடு பணி குறித்து ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, துணை முதல்வர் உதய நிதி வர-வுள்ளதையடுத்து, முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அர-சிதழ் பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில், அனைத்து துறைகள் சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், முடி-வுற்ற பணி விவரங்கள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து, விரைவாக முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். துணை முதல்வர் உதயநிதி டிச.,5ல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்ட உத-விகளை வழங்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரசு மருத்துவக் கல்லுாரியில் கலெக்டர் சரயு, எஸ்.பி., தங்கதுரை ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா, அரசு மருத்துவக் கல்-லுாரி முதல்வர் பூவதி மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை