மேலும் செய்திகள்
எம்.சாண்ட் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
25-Sep-2025
உத்தனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, கழிவுநீர் தேங்கி நின்றது. கால்வாய் அடைப்பு காரணமாக கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், அதை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், அரசு அதிகாரிகளுக்கு மனு வழங்கப்பட்டது.ஆனால், இரு மாதங்களாக நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட தலைவர் முருகேஷ் தலைமையில், ஓசூர் - உத்தனப்பள்ளி சாலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன், நேற்று காலை, 10:00 முதல், 11:00 மணி வரை மறியல் போராட்டம் நடந்தது.சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் உத்தனப்பள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பொக்லைன் மூலமாக கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
25-Sep-2025