உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.76 லட்சத்தில் சாலை பணி

ரூ.76 லட்சத்தில் சாலை பணி

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி பஞ்.,ல் நபார்டு திட்டத்தில், 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காவேரிப்பட்டணம் சாலை முதல், ஜம்புகுட்டப்பட்டி வரை தார்ச்சாலை அமைக்கவும், போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே, 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிழற்கூடம் அமைக்கவும், பூமி பூஜை நடந்தது. இதில் பர்கூர், தி.மு.க., - -எம்.எல்.ஏ., மதியழகன், ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் அருள்குமார், சரவணன், இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் வெப்பாலம்பட்டி பஞ்.,ல் நபார்டு திட்டத்தில், 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொப்படிகுப்பம் முதல் ஆவல்நாய்க்கம்பட்டி வரை தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில், பர்கூர், தி.மு.க., -- எம்.எல்.ஏ., மதியழகன், ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, கவுன்சிலர் பழனி உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி