உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.6.66 லட்சம் உண்டியல் வசூல்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.6.66 லட்சம் உண்டியல் வசூல்

கிருஷ்ணகிரி, சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 6.66 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில், 3 மாதங்களுக்கு ஒரு முறை கோவில் உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கடந்த வாரம் ஆடிக்கிருத்திகை திருவிழா முடிந்துள்ளதால், நேற்று கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர்கள் ராமமூர்த்தி மற்றும் கவிப்பிரியா ஆகியோர் தலைமையில், கோவிலில் வைத்திருந்த, 7 உண்டியலில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டன. கல்லுாரி மாணவர்கள் மற்றும் பெண்கள் உள்பட, 20க்கும் மேற்பட்டவர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர். உண்டியலில், 6.66 லட்சம் ரூபாய், 36.300 கிராம் தங்கம், 350.100 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் பரம்பரை அறங்காவலர் கிருஷ்ணசந்த் மற்றும் போலீசார் உள்பட பலர் பங்கேற்றனர். காணிக்கை எண்ணும் பணிகள், 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. வங்கி ஊழியர்கள் காணிக்கையை கணக்கிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ