உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சமாஜ்வாதி கட்சி ஆர்ப்பாட்டம்

சமாஜ்வாதி கட்சி ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, நெல்வாய் கிரா-மத்தில் வாலிபரை, பெட்ரோல் ஊற்றி கொலை செய்த நபர்-களை, குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி, ஊத்தங்கரை ரவுண்டானாவில் சமாஜ்வாதி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்-பாட்டம் நேற்று நடந்தது. கட்சி மாவட்ட செயலாளர் அன்பு தலைமை வகித்தார். இளைஞரணி செயலாளர் திருநாவுக்கரசு, வெங்கடேசன், சவுந்தர், யாதவர் சங்க நிர்வாகி வினோத், சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொலைவெறி தாக்குதலால் கொல்லப்பட்ட தமிழரசனுக்கு, தமி-ழக அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், கொலை செய்த நபர்களை, தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !