உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சந்தான வேணுகோபால் சுவாமி கோவில் தேர்த்திருவிழா

சந்தான வேணுகோபால் சுவாமி கோவில் தேர்த்திருவிழா

ஓசூர் : தளியில் பழமையான சத்யபாமா சமேத சந்தான வேணுகோபால் சுவாமி கோவில் பிரம்மோற்சவம் கடந்த, 5ல் துவங்கியது. தொடர்ச்சியாக நேற்று தேர்திருவிழா நடந்தது. அலங்கரித்த தேரில், சத்யபாமா சந்தான வேணுகோபால் சுவாமி உற்வச மூர்த்திகளை அமர்த்தி தேர்பவனி நடந்தது. இதில், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து, தேர்த்திருவிழாவை துவக்கி வைத்தனர்.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'கோவிந்தா' கோஷமிட்டு, தேரின் வடம் பிடித்து கோவிலைச் சுற்றி வந்து நிலை நிறுத்தினர். விழாவில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்த தளியை சேர்ந்த இஸ்லாமிய ஜமாத் கமிட்டியினர் பக்தர்களுக்கு குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், பாதாம், பழரசங்கள் வழங்கினர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமையில், இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை