உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிவதற்கான முன் திட்டமிடல் கூட்டம்

பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிவதற்கான முன் திட்டமிடல் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிவதற்கான, முன் திட்டமிடல் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும், 6 முதல், 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தை-களை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்-கப்பட்டு வருகிறது. பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்-கெடுப்பு பணி மேம்படுத்திட மொபைல் செயலியை பயன்ப-டுத்தி, மாணவர்களின் விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். கணக்கெடுப்பு பணியை பிறத்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். கணக்கெடுப்பு நடத்தி பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியப்பட்டவுடன், பள்ளியில் சேர்க்கை மற்றும் சிறப்பு பயிற்சி செயல்பாடுகள் மேற்-கொள்ள வேண்டும். இளம்வயது திருமணம், குழந்தை தொழி-லாளர்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், போதை அடி-மையாகும் குழந்தைகள், வேறு மாநிலம் மற்றும் மாவட்டத்திலி-ருந்து புலம் பெயர்ந்த குழந்தைகள், குடும்ப சூழலால் இடை-நின்ற குழந்தைகள், பெற்றோர் இழந்த குழந்தைகள் ஆகியோரை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் களஆய்வு மேற்-கொண்டு, அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.மாவட்ட சி.இ.ஓ., (பொ) முனிராஜ், உதவி திட்ட அலுவலர் வடிவேல், பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி