உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் வரவேற்றார். தலைவர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் சக்திவேல், மகளிரணி செயலாளர் மேரி ஷெரின், தலைமையிட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில சட்ட செயலாளர் சீனிவாசன், மாநில மகளிரணி இணை செயலாளர் ஆனந்திமாலா ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை, அமைச்சு பணியாளர்களை நியமிக்க வேண்டும். தன் பங்கீட்டு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை