புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்
பாலக்கோடு: தர்மபுரி மாவட்ட, உணவு பாதுகாப்பு அலுவலர் பானுசுஜாதா தலைமையில், பாலக்கோடு, காரிமங்கலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்-யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு போலீஸ் எஸ்.ஐ., ரவி உள்ளிட்ட குழுவினர் இணைந்து, பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பீடா கடைகள், மொத்த விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, பாலக்கோடு அருகே குத்தலஹள்ளி பஞ்., அலுவ-லகம் எதிரில் ஒரு பெட்டி கடையிலும், கம்மாளப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பாப்பநாயக்கனஹள்ளியில் ஒரு மளிகை கடையிலும், புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இந்த கடைகள் இயங்க, 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால், உணவு பாதுகாப்பு துறைக்கு, 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.