உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்; மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்; மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

ஓசூர்: சொத்துவரி செலுத்தாத கடைகளுக்கு, 'சீல்' வைத்து வரும் நிலையில், ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று, வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு, 6 மாதங்களுக்கு மேல் சொத்து வரி செலுத்தாத மற்றும் தொழில் உரிமம் பெறாத வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம், 'சீல்' வைத்து வருகிறது. இதற்கு ஓசூர் அனைத்து வணிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், துாய்மை இந்தியா திட்டத்தில், குப்பைக்கு விதிக்கப்படும் வரியை பல மடங்கு உயர்த்தி, 2017 முதல், முன்தேதியிட்டு, 7 ஆண்டுகளுக்கு கட்ட, மாநகராட்சி கூறியுள்ளதால், வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த உத்தரவை திரும்ப பெறும் வரை, சொத்து வரி செலுத்த மாட்டோம் என்ற முடிவில் வணிகர்கள் உள்ளனர். இது தொடர்பாக, மாநகர மேயர் சத்யாவிடம் நேற்று முன்தினம் மனு கொடுத்தனர். அப்போது, சொத்து வரிக்காக, கடைகளுக்கு, 'சீல்' வைக்கக்கூடாது என கேட்டுக் கொண்டனர்.இந்நிலையில், சொத்து வரி செலுத்தாத கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு, கமிஷனர் ஸ்ரீகாந்த் உத்தரவின்படி நேற்றும் மாநகராட்சி ஊழியர்கள், 'சீல்' வைத்தனர். இதை கண்டித்து, ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன், ஓசூர் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சங்க தலைவர் ஹேமராஜ், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் துரை உட்பட பலர் பங்கேற்றனர். பின், கமிஷனரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை