உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, ஆனந்த் நகர் மற்றும் அந்திவாடி ஆகிய பகுதிகளில், நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். மாநகர நல அலுவலர் பிரபாகரன் முன்னிலையில், 300 க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை