உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2வது நாளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்

2வது நாளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்

கிருஷ்ணகிரி: இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நேற்று, 2வது நாளாக நடந்தது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேலநிலைப்பள்ளி, பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி, பழைய சப்-ஜெயில் சாலை நகராட்சி நடுநிலைப்-பள்ளி, மகளிர் கலை கல்லுாரி ஆகிய இடங்-களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடந்தன. முகாம்களில் ஏராள-மான பொதுமக்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்-கொண்டனர்.இப்பணிகளை, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் ஷாஜகான் ஆய்வு செய்தபின் கூறுகையில், ''ஜன., 3 மற்றும், 4ல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. இதில் தகுதியான நபர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று பெயர் சேர்த்தல் படிவம், 6, பெயரை நீக்-குதல் படிவம், 7, வாக்காளர் படடியலில் திருத்தம் செய்ய படிவம், 8 போன்ற படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை சேர்த்து கொள்ளலாம். 17.2.2026 பிப்., 17ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படு-கிறது,'' என்றார். இதில், தாசில்தார் ரமேஷ் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ