மாநில, மாவட்ட கிரிக்கெட் போட்டி: 23ல் வீரர், வீராங்கனை தேர்வு முகாம்
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி கிரிக்கெட் சங்க, மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும், மாநில, மாவட்டங்க-ளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் வரும் மே மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. இதில் கலந்து கொள்ளும் கிருஷ்ணகிரி மாவட்ட, 14, 16 மற்றும், 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் அணிகளை தேர்வு செய்யும் தேர்வு முகாம், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கிங்ஸ்லி மெட்ரிக் மேல்நி-லைப்பள்ளியில் வரும், 23ல் நடக்க உள்ளது. கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள இயலும். தேர்வு முகாமுக்கு வருவோர் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் நகல் கட்டாயம் எடுத்து வர வேண்டும். விருப்-பமுள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள, மாவட்ட கிரிக்கெட் சங்கம், 41, நஞ்சப்ப செட்டி காலனி, ராயப்பன் தெரு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரில் சென்று விண்ணப்பங்-களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, சங்க மேலாளர் காளிதாசனை, 99941 82296 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.