உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாநில இறகு பந்து போட்டி; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மாநில இறகு பந்து போட்டி; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கும் மாநில அளவிலான இறகு பந்து போட்டியில், 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்ட இறகு பந்து சங்கத்தின் சார்பில், மாவட்ட உள் விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி கடந்த, 3 நாட்களுக்கு முன்பு துவங்கியது. 5 நாட்கள் நடக்கும் இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டிகளை மாவட்ட இறகு பந்து சங்கத்தின் தலைவர் ரமேஷ் துவக்கி வைத்தார். ஆண், பெண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டைகள், கலப்பு இரட்டையர்கள் என, 5 பிரிவுகளில், நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகளுக்கு, நடுவர் வெங்கட் நாராயணா தலைமையில் மாநில அளவிலான, 15 நடுவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட இறகு பந்து சங்கத்தின் செயலாளர் ஷராபத்துல்லா, துணை செயலாளர் பிரேம்குமார், துணைத்தலைவர் ரமேஷ் வேலாயுதம் ஆகியோர் செய்துள்ளனர். நாளை (ஆக.,1) இறுதி போட்டிகள் முடிந்து, பரிசளிப்பு விழா நடக்க உள்ளது. இதில், தமிழக பூப்பந்து சங்க மாநில செயலாளர் அருணாச்சலம் மற்றும் பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர், வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !