கிருஷ்ணகிரி: -கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரிக்கு, 20.59 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐ.வி.டி.பி., நிறுவனம் பல்வேறு உதவிகளை வழங்கியது.கிருஷ்ணகிரி ஐ.வி.டி.பி., நிறுவனம், கடந்த கல்வியாண்டில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தன்னிறைவு திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, 5 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்திற்காக தனது பங்களிப்பாக, 50 லட்சம் ரூபாய் வழங்கியது. இதன் திறப்பு விழாவில், ஐ.வி.டி.பி., நிறுவனர் குழந்தை பிரான்சிஸ், கட்டடத்திற்கு தேவையான 6.25 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 நாற்காலிகள், 4.30 லட்சம் மதிப்பில், 45 டெஸ்க், பெஞ்சுகள், 12,800 ரூபாய் மதிப்பில் அலமாரிகள், 40,000 ரூபாய் மதிப்பில் கீரின்போர்டு, 62,000 ரூபாய் மதிப்பில் ஒலியமைப்பு கருவி என மொத்தம், 11.70 லட்சம் ரூபாய் மதிப்பில் தளவாட பொருட்களை வழங்கினார்.மேலும், 851 மாணவியருக்கு, 5.02 லட்சம் ரூபாய் மதிப்பில் சீருடைகள், 1.09 லட்சம் ரூபாய் மதிப்பில் எல்.இ.டி., திரை, 11 மாணவியருக்கு, 1.18 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை, புத்தக பைகள் உள்பட, 20.59 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.ஓய்வு பெற்ற சி.இ.ஓ., பாஸ்கரன், கல்லுாரி முதல்வர், துறை தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.