வேதவல்லி சமேத பென்னேஸ்வரர் கோவிலில் சுவாமி திருக்கல்யாணம்
கிருஷ்ணகிரி: பென்னேஸ்வர மடம் கிராமத்தில், வேதவல்லி சமேத பென்னேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட் டம், காவேரிப்பட்டணம் அடுத்த பென்னேஸ்வரமடம் கிராமத்தில், விஸ்வாமித்ர கோத்திர குடும்பத்தினர் சார்பில், 35வது ஆண்டு, வேதவல்லி சமேத பென்னேஸ்வர சுவாமி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு நிர்மால்ய, பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பகல், 11:40 மணி க்கு, உற்சவ வேதவல்லி சமேத பென்னேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து, வேதவல்லி சுவாமிக்கும், பென்னேஸ்வர சுவாமிக்கும் மந்திரங்கள் முழங்க, மாலை மாற்றி திருக்கல்யாணம் நடந்தது. இந்நிகழ்வில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை, 7:00 மணி முதல் சிற்றுண்டியும், பகலில் அன்னதானமும் வழங்கப்பட்டன. பிற்பகல், 12:30 மணிக்கு, கங்கணதாரம் நடந்தது.* சாலமரத்துப்பட்டியிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய சுவாமி கோவிலில், சுவாமிக்கு திருமஞ்சன விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.