உறைவிட பள்ளியில் ஆசிரியர் பணி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனங்-களால் கொல்லப்பள்ளி, தளிகொத்தனுார், தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் செயல்படும் கே.ஜி.பி.வி., உறைவிடப்பள்-ளிகள், கக்கதாசம், தேன்கனிக்கோட்டை, அத்திமுகம் ஆகிய இடங்களில் செயல்படும் என்.எஸ்.சி.பி.ஏ.வி., உறைவிடப் பள்-ளிகளில் பணிபுரிய, தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட பெண் ஆசிரியர்கள் தேவை.மேற்குறிப்பிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் முற்றிலும் தற்கா-லிகமானது. உறைவிடப் பள்ளிகளில் தங்கி பணிபுரிய வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பாடத்தில், இளநிலை பட்டத்துடன் பி.எட்., மற்றும் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்-ணப்பங்கள் அனைத்து சான்றுகள் (நகல்) மற்றும் அனுபவ சான்-றுகளுடன், கே.ஜி.பி.வி., உறைவிடப்பள்ளி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி மாவட்டம், என்ற முகவரிக்கு வரும், 30க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.