உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கவரிங் நகைகளை ரூ.5 லட்சத்திற்கு விற்க முயற்சித்த வாலிபர் கைது

கவரிங் நகைகளை ரூ.5 லட்சத்திற்கு விற்க முயற்சித்த வாலிபர் கைது

ஓசூர்:விழுப்புரம் மாவட்டம், புலிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 22. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் விகாஷ் நகரில் தங்கி, தளி சாலையிலுள்ள ரயில்வே கேட் அருகே மொபைல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த, 9ம் தேதி மணிகண்டன் கடைக்கு வந்த, கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், சந்தேமலா கிராமத்தை சேர்ந்த அக்சய், 20, மற்றும் மத்திய பிரதேச மாநிலம், போபாலை சேர்ந்த சோனு, 26, ஆகியோர், பைபர் கேபிள் குழி தோண்டியபோது, பழைய நாணயங்கள் கிடைத்ததாக கூறி, அதை விற்று தர முடியுமா எனக்கேட்டு மணிகண்டனிடம் பழக துவங்கினர். அதன்பின் ஒரு வாரம் கழித்து, மீண்டும் ஒரு செயினை கொண்டு வந்து, இதேபோல் நிறைய தங்க நகைகள் குழிதோண்டும் போது கிடைத்தது. யாராவது நகைகளை வாங்குவதற்கு இருந்தால் சொல்லுங்கள் என, மணிகண்டனிடம் கேட்டுள்ளனர்.நேற்று மதியம், ஒரு கிலோ எடை கொண்ட தங்க முலாம் பூசிய கவரிங் நகைகளை எடுத்து வந்து, இந்த நகைகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. இதை விற்று எவ்வளவு பணம் வந்தாலும் நீங்களே எடுத்து கொள்ளுங்கள். எங்களுக்கு, 5 லட்சம் ரூபாய் மட்டும் கொடுங்கள் என கேட்டுள்ளனர். தன்னை ஏமாற்ற வந்திருப்பதை அறிந்த மணிகண்டன், நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்தார். சோனு தப்பியோடிய நிலையில், அக்சயை நண்பர்களுடன் சேர்ந்து பிடித்த மணிகண்டன், ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்து, கவரிங் நகையை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சோனுவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்