உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவில் கும்பாபிஷேகம்

கோவில் கும்பாபிஷேகம்

ஓசூர், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையிலுள்ள வேல்முருகன் கோவில் வளாகத்தில், துர்க்கையம்மன் மற்றும் தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் சன்னதி தனித்தனியாக உள்ளன. இவை கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் நிதியுதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மேல், கோவில் சன்னதிகளின் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவர் வேல்முருகனுக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இக்கோவிலில் வரும், 28ம் தேதி துர்க்கையம்மன் ஆடி பூர வளைகாப்பு விழா நடக்கிறது. இதில் கர்ப்பிணிகள் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ள, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை