உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மா.திறனாளிகள் நலத்துறை 150 பேருக்கு பணியாணை

மா.திறனாளிகள் நலத்துறை 150 பேருக்கு பணியாணை

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 302 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, நடந்த பேச்சு, கட்டுரை மற்றும் குறுஞ்சொற்றொடர் போட்டிகளில் வெற்றிபெற்ற, 15 மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பராமரிப்பு மறுவாழ்வு சேவைகள், ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 150 பணியாளர்களுக்கு பணி நியமண ஆணைகளை வழங்கினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை