உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்ட வனத்துறை

பள்ளியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்ட வனத்துறை

ஓசூர்: சூளகிரி அடுத்த சின்னாறு அருகே பேடப்பள்ளி அரசு மாதிரிப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 6 முதல், பிளஸ் 2 வரை மொத்தம், 530 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியை சுற்றி வனப்பகுதி உள்ளது. வன விலங்குகள் பள்ளிக்குள் புகாமல் இருக்க, காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுவாயில் வழியாக, நேற்று காலை பள்ளி வளாகத்திற்குள், 12 அடி நீள மலைப்பாம்பு ஊர்ந்து வந்து, செடி, கொடிகள் மறைவில் பதுங்கியது.இதை பார்த்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்தனர். ஓசூர் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, வனகாவலர் சிவக்குமார், வனவர் விஜிஅரசு ஆகியோர் அங்கு சென்று, மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, கரியானப்பள்ளி காப்புக்காட்டில் விட்டனர். அதன் பின், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை