கர்நாடகாவை போல் தமிழக விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும்
ஓசூர்: ''கர்நாடகா மாநிலத்தை போல், தமிழக விவசாயிகளின் நிலங்க-ளுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்,'' என, மத்திய அரசு உறுதிமொழிகள் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் நிலை குழு தலைவர் தம்பிதுரை எம்.பி., வலியுறுத்தி உள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று விவசாயிகளுடன் கலந்-துரையாடிய பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கர்நாடகா மாநிலத்தில் துவங்கி, தமிழக எல்லையான ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா வழியாக, சாத்தனுாரில் துவங்கி தேவிரப்பள்ளி வரை, 45 கி.மீ., துாரத்திற்கு சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு அமைக்கப்படுகிறது. இதற்கு நிலம் வழங்கிய விவசாயி-களிடம், 45 கி.மீ., துாரம் சர்வீஸ் சாலை அமைக்கப்படும்.நிலத்திற்கு, உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்-டது. அதை நம்பி விவசாயிகள் நிலம் வழங்கினர். ஆனால், 45 கி.மீ., துாரம் சர்வீஸ் சாலை மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்-கப்படவில்லை. கர்நாடகா மாநிலத்தில் ஏக்கருக்கு, ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிக-ளுக்கு வழிகாட்டி மதிப்பை வைத்து ஏக்கருக்கு, 3.50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். எனவே, மத்திய அமைச்சர் நிதின்கட்காரியை கடந்த, 4ல், சந்தித்-தபோது, 45 கி.மீ., துாரமும் சர்வீஸ் சாலை அமைக்க, தனி டெண்டர் விடுவதாக உறுதியளித்தார். கர்நாடகாவை போல, சாலைக்கு நிலம் வழங்கிய தமிழக விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க, தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டுமென அவர் கூறினார். எனவே, மாவட்ட நிர்வாகம், நிலம் இழந்த விவசாயிகளுக்கு, மாநில அரசின் அனுமதியோடு நிலத்தின் மதிப்பை கூட்டி நிர்ண-யித்து கொடுத்தால், உரிய இழப்பீடு கிடைக்கும். விவசாயிகள் உணர்வை மதித்து, மாவட்ட கலெக்டர் தாய் உள்ளத்தோடு பரிசீ-லனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.பேட்டியின் போது, சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு நில எடுப்பு பாதிப்பு விவசாயிகள் சங்க செயலாளர் அருண், தலைவர் முனி-வெங்கடப்பா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி உட்-பட பலர் உடனிருந்தனர்.