உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளிக்கு வழிப்பாதை கொடுக்க போலீசாரிடம் முறையிட்ட பெற்றோர்

அரசு பள்ளிக்கு வழிப்பாதை கொடுக்க போலீசாரிடம் முறையிட்ட பெற்றோர்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே தளியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகருகே உள்ளன. பெண்கள் பள்ளி வளாகத்தில், தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியும், பெண்களுக்கான விடுதியும் உள்ளது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் வழியாக மாணவியர் பள்ளி செல்ல வழிப்பாதை இருந்தது. ஆனால், சுற்றி செல்ல வேண்டியிருந்ததால், மாணவியர், அருகே தளி போலீஸ் ஸ்டேஷன் பின்புற வழியில் செல்ல துவங்கினர். அதற்காக பள்ளி காம்பவுன்ட் சுவரை இடித்து இரும்பு கேட் அமைக்கப்பட்டது.இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் அடிக்கடி வெளியே வந்து, தளி போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் சுற்றித்திரிவதை போலீசார் பார்த்தனர். மேலும், சமூக விரோத செயல்களும் நடக்க துவங்கின. அதனால் போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன், ஸ்டேஷன் பின்புற வழியாக பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியாத அளவிற்கு தடுப்புச்சுவர் அமைத்தனர். இதையறிந்த மாணவ, மாணவியரின் பெற்றோர், நேற்று காலை தளி ஸ்டேஷன் முன் திரண்டு வழிப்பாதை கேட்டனர். அவர்களிடம், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தளி ஸ்டேஷன் முன்புறம், மாணவ, மாணவியர் செல்ல வழி விடுவதாக போலீசார் தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பள்ளி காம்பவுன்ட் சுவரை இடித்து மாணவ, மாணவியர் பள்ளி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி