உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரியல் எஸ்டேட் அதிபரை கொன்று எரித்தவர் கைது

ரியல் எஸ்டேட் அதிபரை கொன்று எரித்தவர் கைது

தேன்கனிக்கோட்டை : மகளை திருமணம் செய்து கொடுக்க தொடர்ந்து தொந்தரவு செய்ததால், ரியல் எஸ்டேட் அதிபரை கொன்று எரித்ததாக, கைதானவர் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே, நெல்லுமார் - காடுகெம்பத்தப்பள்ளி கிராம சாலை வனப்பகுதியில் கடந்த, 15 ல் எரிந்த நிலையில், 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. தளி போலீசார் விசாரணையில், அவர், கர்நாடக மாநிலம் ஆரஹள்ளி அருகே, கும்பாரதொட்டியை சேர்ந்த நாகேஷ், 32, என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவர், கடந்த, 13 ல் மாயமானதும் தெரியவந்தது. கர்நாடகா மாநிலத்தில் நாகேஷை கொலை செய்து, சடலத்தை இப்பகுதியில் எரித்ததும் தெரிந்தது. இக்கொலையில் ஈடுபட்ட, நாகேஷின் உறவினரான கும்பாரதொட்டியை சேர்ந்த நாகராஜ், 46, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:நாகராஜிடம் அவரது, 17 வயது மகளை திருமணம் செய்து கொடுக்க, கொலையான நாகேஷ் பலமுறை தொந்தரவு செய்துள்ளார். நாகேஷ் மீது இரு கொலை வழக்குகள் இருந்ததால், அவருக்கு திருமணம் செய்து கொடுக்க நாகராஜிற்கு விருப்பமில்லை. சமூக வலைதளம் மூலம் தன் மகளிடம் நாகேஷ் பேசுவதை அறிந்த நாகராஜ், நாகேஷை கொல்ல முடிவு செய்தார். தன் நண்பரான ஆட்டோ டிரைவர் பொம்மையா, 37, உதவியுடன் கடந்த, 13 ல் நாகேஷை காரில் அழைத்து சென்ற நாகராஜ், முன் சீட்டில் அமர்ந்திருந்த அவரை, பின்புறமாக இருந்து, கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து, சடலத்தை தளி அருகே கொண்டு வந்து, அடையாளம் தெரியாமல் இருக்க எரித்துள்ளார்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி