உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மரத்தின் பரண் மீது துாங்கியவர் உருண்டு விழுந்து உயிரிழப்பு

மரத்தின் பரண் மீது துாங்கியவர் உருண்டு விழுந்து உயிரிழப்பு

மரத்தின் பரண் மீது துாங்கியவர்உருண்டு விழுந்து உயிரிழப்புஓசூர், அக். 1-கர்நாடகா மாநிலம், கனகபுரா அருகே பாலகொண்டஹள்ளியை சேர்ந்தவர் ரவி, 25. கூலித்தொழிலாளி; கடந்த, 28 மாலை, தளி அருகே நடந்த கவுரம்மா கோவில் திருவிழாவிற்காக, தன் தாய் ஜெயம்மா என்பவருடன், சம்பங்கிமரதொட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் காலை உறவினர் சிக்கராஜ் என்பவருடன், அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் மரத்தின் அமைத்திருந்த பரண் மீது ரவி துாங்கினார். அப்போது மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ