உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் வழிதவறி தவித்த மூதாட்டி மகனிடம் ஒப்படைத்த போலீசார்

ஓசூரில் வழிதவறி தவித்த மூதாட்டி மகனிடம் ஒப்படைத்த போலீசார்

ஓசூரில் வழிதவறி தவித்த மூதாட்டிமகனிடம் ஒப்படைத்த போலீசார்ஓசூர், அக். 30-மதுரையில் இருந்து ஓசூர் வந்த மூதாட்டி, வீட்டில் இருந்து வெளியேறி வழித்தவறிய நிலையில், அவரை மீட்டு மகனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வைரமுத்து என்பவரின் மனைவி மூக்கம்மாள், 70. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மிடுகரப்பள்ளியில் தங்கி, பெங்களூருவில் பணியாற்றும் தன் மகன் பன்னீர்செல்வம் மற்றும் குழந்தை பெற்றுள்ள தன் பேத்தி ஆகியோரை பார்க்க நேற்று முன்தினம் காலை, ஓசூர் வந்தார். வீட்டிலிருந்து வெளியே வந்தவர் வழித்தவறி, ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தார்.அன்றிரவு ராயக்கோட்டை சாலையில் ரோந்து சென்ற டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ், மூதாட்டி மூக்கம்மாள் தனியாக சுற்றித்திரிவதை பார்த்தார். மூதாட்டி நகை அணிந்திருந்ததால், வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருந்தது. அதனால் மூதாட்டியை பத்திரமாக மீட்டு, ஓசூர் அண்ணாமலை நகரில், ஆராதனா தொண்டு நிறுவனம் மூலம் பராமரிக்கப்படும் நகர்புற ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில், இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஒப்படைத்தார். அவரிடம் விசாரித்தபோது, அவரது மகன் வீட்டிற்கு வந்தது தெரிந்தது. இதையடுத்து நேற்று அவரது மகன் பன்னீர்செல்வன் வீட்டிற்கு சென்று, அவரை அழைத்து வந்து, மூதாட்டி மூக்கம்மாளை அவரிடம் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் ஆராதனா தொண்டு நிறுவனர் ராதா ஆகியோர் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை