டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு
கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டி அடுத்த வீரமலையை சேர்ந்தவர் அருள்மணி, 31, டிராக்டர் டிரைவர். நேற்று முன்தினம் வீரமலை ஏரி அருகே, டிராக்டரில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.