மேலும் செய்திகள்
கோவிலில் திருட வந்த மர்ம நபர்கள்
01-Nov-2024
கடை சுவரை துளையிட்டுவெல்டிங் மிஷின் திருட்டுஓசூர், நவ. 19-சூளகிரி அடுத்த காமன்தொட்டியில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வாடகை கடைகள் உள்ளன. இங்கு, திருமலைகோட்டா பகுதியை சேர்ந்த வினோத், 35, என்பவர், 5 ஆண்டுகளாக வெல்டிங் கடை நடத்தி வருகிறார்; கடந்த, 16 இரவு வேலையை முடித்து கடையை மூடி சென்றார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து நேற்று வழக்கம் போல் வினோத் கடையை திறந்தார்.அப்போது கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெல்டிங் இயந்திரங்கள், இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த வினோத், சூளகிரி போலீசில் புகார் செய்தார். கடையிலிருந்த, 'சிசிடிவி' கேமராவின் ஹார்டிஸ்கையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். சூளகிரி போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
01-Nov-2024