மேலும் செய்திகள்
சேரில் இருந்து விழுந்தவர் சாவு
02-Sep-2025
கெலமங்கலம்:தெருநாய் கடித்து குதறியதில் ரேபிஸ் வைரஸ் பாதிப்பிற்கு ஆளான மூன்றரை வயது குழந்தை இறந்தது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நந்தலால், 28. இவரது மனைவி ரேகா, 25; தம்பதியின் மூன்றரை வயது மகன் சத்யா. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மாசிநாயக்கனப்பள்ளியில் தங்கி, ராமமூர்த்தி என்பவரின் பசுமை குடிலில் தம்பதி பணியாற்றி வருகின்றனர். ஆக., 31ம் தேதி மதியம், பசுமை குடிலுக்கு வெளியே குழந்தை சத்யாவிளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருநாய் கடித்து குதறியது. தலை, கை போன்ற இடங்களில் படுகாயமடைந்த குழந்தையை மீட்ட பெற்றோர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர் சிகிச்சைக்கு பின் குழந்தையை, சமீபத்தில் வீட்டுக்கு அழைத்து சென்றனர். நேற்று மாலை கழிப்பறைக்கு சென்றபோது குழந்தை மயங்கி விழுந்த நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ரேபிஸ் பாதித்து குழந்தை இறந்தது தெரிய வந்தது. செப்., 17ம் தேதி, தளி அருகே கோட்டையனே அக்ரஹாரம் பகுதியில் தொழிலாளி முனிமல்லப்பா, நாய் கடித்து ரேபி ஸ் பாதித்து இறந்தார். கடந்த பிப்., 3ல், சிக்கேகவுண்டனுார் அரசு பள்ளி நான்காம் வகுப்பு மாணவன் நந்தீஷ், 9, தளி அருகே குப்பட்டி பஞ்., தின்னுாரை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி எட்வின் பிரியன், 23, ஆகியோர் நாய் கடித்து, ரே பிஸ் பாதித்து பலியானது குறிப்பிடத்தக்கது.
02-Sep-2025