உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தீயில் கருகி டிப்பர் லாரி நாசம்

தீயில் கருகி டிப்பர் லாரி நாசம்

பாகலுார்: ஓசூர் அருகே மாரசந்திரத்தை சேர்ந்தவர் சீனி-வாசன், 42. ஓசூரில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை, 2:30 மணிக்கு, நாரிகானபுரம் பகுதியில் திலிப்குமார், 25, என்பவர், டிப்பர் லாரியை வேகமாக ஓட்டி சென்றார். நாரிகானபுரம் துணை மின்நிலையம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர கல்லின் மீது மோதியது. டிரைவர் திலீப்குமார் கீழே குதித்து உயிர் தப்பிய நிலையில், லாரி தீப்பிடித்து முழுவதும் எரிந்து நாசமானது. சீனிவாசன் புகார் படி, பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை