ஆசிரியை படுகொலையை கண்டித்து டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்
ஆசிரியை படுகொலையை கண்டித்துடிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி, நவ. 22-தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை கொலையை கண்டித்து, கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் மாநில அமைப்பு சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் பொன் நாகேஷ் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் தியோடர் ராபின்சன், ஆசிரியர் ஆரோக்யராஜ் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பேசுகையில், ''தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்களுக்கு கலக்கத்தையும், பயத்தையும் உருவாக்கி உள்ளதோடு, உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற, டாக்டர்களுக்கு உள்ளது போன்று ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஆசிரியர் ரமணி குடும்பத்திற்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.