உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஏரியில் டன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள்

ஏரியில் டன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள்

போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் ஒன்றியம், தாமோதரஹள்ளி பஞ்., சாதிநாய்க்கம்பட்டியில் ஏரி உள்ளது. இந்த ஏரி, தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் தண்ணீர் இருந்தது. இதனால், அக்கிராம மக்களின் முயற்சியால் ஜிலேபி, பாப்லேட் உள்ளிட்ட வகை மீன் குஞ்சுகள் விடப்பட்டது. ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல், ஒரு கிலோ வரை வளர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று, அந்த ஏரியில், 2 டன் அளவிற்கு மீன்கள் செத்து மிதந்தன. அவற்றை அப்பகுதி மக்கள் அள்ளி கரையில் கொட்டினர். வெயிலின் தாக்கத்தால் ஏரியில் இருந்த நீர் சூடேறி மீன்கள் இறந்ததா, அல்லது சமூக விரோதிகள் ஏரி நீரில் விஷம் கலந்தனரா என்ற கோணத்தில் பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி