உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விபத்தில் டிராக்டர் டிரைவர் பலி

விபத்தில் டிராக்டர் டிரைவர் பலி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பெரிய தின்னுாரை சேர்ந்தவர் முனிராஜ், 34. டிராக்டர் டிரைவர்; நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, திருமலை கோட்டா - கோனேரிப்பள்ளி சாலையில் டிராக்டரை ஓட்டி சென்றார். தனியார் கிரானைட் நிறுவனம் அருகே சென்ற போது, டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஸ்கூட்டர் கவிழ்ந்து தொழிலாளி பலிகிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், பெங்களூரு, விஜயநகரை சேர்ந்தவர் விஜய், 43; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 24ல், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் திருவண்ணாமலை சென்றார். இரவு, 10:20 மணியளவில், தொகரப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்து கிருஷ்ணகிரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். மத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ