| ADDED : ஜன 06, 2024 07:14 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிபட்டி அடுத்த, பாப்பம்பாடியில் ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு குறித்து மாவட்ட அளவிலான பயிற்சி வேளாண்மை துறை சார்பில் நடந்தது.பாப்பிரெட்டிப்பட்டி வேளாண் அலுவலர் ஜீவகலா தொடங்கி வைத்தார். உதவி கால்நடை மருத்துவர் விஜயகுமார், 'கால்நடை வளர்ப்பு முறையில் நோய் தடுப்பு மேலாண்மை, தீவன மேலாண்மை, இளங்கன்று பராமரிப்பு குறித்து' விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர்கள் சுரேஷ், திருநாவுக்கரசு உதவி தோட்டக்கலை அலுவலர் ஜேசுதாஸ் ஆகியோர் துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்து பேசினர். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன், உதவி தொழில்நுட்ப மேலாளர் திருப்பதி சண்முகம் ஆகியோர் செய்தனர்.