உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரயில் மோதி பலியான கோவில் காளைக்கு அஞ்சலி

ரயில் மோதி பலியான கோவில் காளைக்கு அஞ்சலி

போச்சம்பள்ளி, மத்துார் அடுத்த, கே.எட்டிப்பட்டியில் கடந்த, 7 ஆண்டுகளாக கோவில் காளை இருந்து வந்தது. இக்காளை அப்பகுதியில் சுற்றித்திரிந்து, மக்களிடம் அன்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த, 5 நாட்களாக கோவில் காளை, இப்பகுதியில் இல்லாமல் இருந்தது. இதை அறிந்த கிராம மக்கள் கோவில் காளையை அங்கும், இங்கும் தேடிய நிலையில், குன்னத்துார் ரயில்வே பாதையில் உடல் சிதறிய நிலையில், இறந்து கிடந்தது. கிராம மக்கள் நேற்று கோவில் காளை உருவம் பொறித்த கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்து, அதற்கு மாலை அணிவித்து, பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை