உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளியில் முப்பெரும் விழா

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

ஊத்தங்கரை, ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர் தின விழா, உலக எழுத்தறிவு தின விழா, இலக்கிய போட்டிகளில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என, முப்பெரும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் சிவகுருநாதன் வரவேற்றார். ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடந்த தமிழ், ஆங்கில மொழி இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ள மாணவர்கள் குமுதா, பிரித்திகா, துவாரகா, குரு உள்ளிட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் யோகலட்சுமி நன்றி கூறினார். ஆசிரியர் ராம்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி