மேலும் செய்திகள்
போச்சம்பள்ளி வாரச்சந்தை தொடர் மழையால் 'வெறிச்'
02-Dec-2024
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை கூடுவது வழக்கம். இங்கு காய்க-றிகள், விவசாய பணிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள், பல-சரக்கு தானியங்கள் மற்றும் கோழி, ஆடு, மாடு உள்ளிட்டவை அதிகளவு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருவண்ணா-மலை மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவர்.அவைகளை வாங்க வியாபாரிகள் சந்தைக்கு வருவதும் வழக்கம். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக போச்சம்பள்ளி வாரச் சந்தையில், ஆடுகள் விற்பனை செய்யும் பகுதியில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது.இரண்டு வாரங்களில், பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு பகுதிக-ளிலிருந்து அதிகளவு ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்-பனைக்கு கொண்டு வருவர். இந்நிலையில் சேறும், சகதியுமாக உள்ள பகுதியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டு-மென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
02-Dec-2024