உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டாடா நிறுவன விடுதியில் ரகசிய கேமரா விவகாரத்தில் இருவருக்கு குண்டாஸ்

டாடா நிறுவன விடுதியில் ரகசிய கேமரா விவகாரத்தில் இருவருக்கு குண்டாஸ்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில், ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இயங்குகிறது. இங்கு பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு, உத்தனப்பள்ளி அடுத்த லாலிக்கல் அருகே, 'விடியல் ரெசிடென்சி' என்ற பெயரில் விடுதி உள்ளது. இங்குள்ள, 4வது பிளாக்கில், 8வது மாடியில் உள்ள ஒரு குளியலறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டு, பெண்கள் குளிப்பதை படம் பிடித்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த மாதம், 4 முதல், 6ம் தேதி வரை பெண் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரகசிய கேமரா வைத்ததாக, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரி குப்தா, 23, மற்றும் அவரது காதலனான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரவி பிரதாப் சிங், 29, ஆகிய இருவரை, உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர். இதில், ரவிபிரதாப் சிங், சேலம் மத்திய சிறையிலும், நீலுகுமாரி குப்தா, கோவை பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பரிந்துரை படி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல், சிறை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை