உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக் மீது டூரிஸ்ட் வேன் மோதல் தேங்காய் வியாபாரிகள் இருவர் பலி

பைக் மீது டூரிஸ்ட் வேன் மோதல் தேங்காய் வியாபாரிகள் இருவர் பலி

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அருகே, பைக் மீது டூரிஸ்ட் வேன் மோதிய விபத்தில், தேங்காய் வியாபாரிகள் இருவர் பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தம்மகவுண்டனுாரை சேர்ந்தவர் பிரகாஷ், 28. இவரது நண்பர் திருப்பத்துார் மாவட்டம், தோக்கியத்தை சேர்ந்த லட்சுமணன், 27. தேங்காய் வியாபாரிகளான இருவரும், நேற்று முன்தினம் சேலத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்த பணத்தை வாங்க, யமஹா எப்இசட் பைக்கில் சேலம் சென்று விட்டு ஊர் திரும்பினர். இரவு, 10:00 மணியளவில், ஊத்தங்கரை, வீரியம்பட்டி கூட்ரோடு அருகே, கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர்.அப்போது, அவ்வழியாக கடலுார் நோக்கி சென்ற மஹிந்திரா டூரிஸ்ட் வேன், பைக் மீது மோதியது. இதில், பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த லட்சுமணனை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிய நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார். டூரிஸ்ட் வேன் டிரைவரான கடலுார் மாவட்டம், புதுக்கடையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி,31, மீது, ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால், சாலையின் இருபுறம், விபத்து பகுதிக்கான அறிவிப்பு பலகை மற்றும் ரிப்ளக்டர்கள் வைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை