மேலும் செய்திகள்
பைக் மோதி தொழிலாளி பலி
21-Nov-2024
ஓசூர்: சூளகிரி அருகே கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் எல்லப்பன், 37. கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, பேரிகை சாலையில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். சூளகிரியிலுள்ள தனியார் பள்ளி அருகே, வடிகால் சுவரில் மோதி மொபட்டுடன் கீழே விழுந்து படுகாயமடைந்து, சம்பவ இடத்தி-லேயே பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி அருகே சோக்காடியை சேர்ந்தவர் மஞ்சுநாத், 31. கர்-நாடகா மாநிலம், பெங்களூருவில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்; நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு, ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் ஊருக்கு சென்றார். ஓசூர் - ராயக்-கோட்டை சாலையில் உள்ள உப்பரதம்மண்டரப்பள்ளி அருகே இரவு, 10:45 மணிக்கு சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், லாரி சக்கரத்தில் சிக்கிய மஞ்சுநாத், உடல் பாகங்கள் பல்வேறு துண்டுகளாக சிதறி, சம்பவ இடத்தி-லேயே பலியானார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Nov-2024