மேலும் செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை: எஸ்.பி.,
24-Nov-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையை சேர்ந்தவர் மணிமாறன், 24. பிரபல ரவுடி. ஏ-பிளஸ் பிரிவில், போலீஸ் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர் மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசில், 7 வழக்கு, தாலுகாவில் ஒரு வழக்கு, மகாராஜ-கடை போலீசில், 2 வழக்குகளும் உள்ளன. இதில், 2 கொலை வழக்குகள், போக்சோ, அடிதடி, கொலை மிரட்டல் உள்பட பல வழக்குகள் அடங்கும். இந்நிலையில், கிருஷ்ணகிரி பழைய-பேட்டை கோட்டை பகுதியில், அங்கூர் ஷேக் ஹூசைன் தெருவில் இருந்த, 7 'சிசிடிவி' கேமராக்களை கடந்த அக்., 11ல் உடைத்த வழக்கில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார், ரவுடி மணி-மாறனை கைது செய்து, அவரது கூட்டாளிகள் சிலரை தேடி வந்-தனர். தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் மணிமாறன், மற்றும் கிருஷ்ணகிரியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்கில் விருதன்கொட்டாயை சேர்ந்த திருப்பதி, 51, ஆகியோரை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்.பி., கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, இருவ-ரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க, கலெக்டர் சரயு உத்-தரவிட்டார்.
24-Nov-2024