உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மரத்தில் பள்ளி வேன் மோதல் இரு மாணவர்கள் காயம்

மரத்தில் பள்ளி வேன் மோதல் இரு மாணவர்கள் காயம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளியின் வேன், நேற்று வழக்கம்போல் மகாராஜகடை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களை அழைத்து செல்ல சென்றது. வேனை பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளியை சேர்ந்த வீரப்பன், 40 என்பவர் ஓட்டினார். காலை, 8:20 மணியளவில் மகாராஜகடை அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த டூவீலரில் மோதாமல் இருக்க வேனை டிரைவர் வீரப்பன் திருப்பினார். அப்போது, சாலையோரத்தில் இருந்த மரத்தில் வேன் மோதி, முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதில், பள்ளி மாணவர்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை